அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த 2 பேர் கைது: லாரி பறிமுதல்


அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த 2 பேர் கைது: லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 27 Feb 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் ஜெயங்கொண்டான் நாட்டுச்சேரி சாலையில் பெரியனாவயல் பகுதியில் சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது அந்த லாரியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா அந்த லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்திய போது புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன், அறந்தாங்கியைச் சேர்ந்த லாரியின் உரிமையாளர் சண்முகம்(வயது47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story