மகனை மீட்டுத்தரக்கோரி மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்
மகனை மீட்டுத்தரக்கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன், தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பெண்கள் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.
இதையடுத்து அதில் ஒரு பெண், தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியவாறு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டார். போலீசார் அங்கு தயாராக வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து 2 பெண்களின் மீதும் ஊற்றினர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வேடசந்தூர் பாளையம் அருகே உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜெகஜோதி (வயது 50), அவருடைய மகள் செல்வராணி (20) என்பது தெரியவந்தது. அவர்களுடன் ரவிச்சந்திரனும் வந்திருந்தார். இதையடுத்து தாய், மகளை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஜீப்பில் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறும் போது, எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் எனது மகன் குமரவேலை (23) மிக்சி, குக்கர் விற்பனை செய்யும் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் மட்டும் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
எனது மகனை தொடர்புகொள்ள முயன்ற போது அவருடைய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் குமரவேலை அழைத்து சென்றவரிடம் கேட்ட போது அவர் முறையாக பதில் கூறவில்லை. எனது மகன் வேலை பார்த்த நிறுவனத்துக்கு சென்று கேட்ட போது, குமரவேலை ஊருக்கு அனுப்பிவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் எனது மகனை சுமார் 3 மாதங்களாக தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் 2 முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார். பின்னர் இதுகுறித்து மனு அளிப்பதற்காக அவரை கலெக்டரிடம், போலீசார் அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story