ஏற்காட்டில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு


ஏற்காட்டில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடு,

சேர்வராயன் மலையில் அமைந்துள்ள கே.புத்தூர் கிராமத்தில் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் பொருட்டு ஏற்காடு வரலாற்று ஆய்வுக்குழுவைச்சேர்ந்த ஆசிரியர் நீலகிரி கிருஷ்ணமூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் ஏற்பாடு வாழவந்தி பஞ்சாத்துக்கு உட்பட்ட கே.புதூர் சாளாங்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சின்னவெள்ளையன், சின்னம்மா ஆகியோரின் வீடுகளின் அருகில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பழங்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நீலகிரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:–

இது கூர்முனைத்தாழி வகையை சேர்ந்ததாகும். இது போன்று முதுமக்கள் தாழி ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த தாழி 95 செ.மீ உயரமும், இதன் வாய் பகுதி பகுதி 19 செ.மீ விட்டமும் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் கழுத்துப்பகுதி 127 செ.மீட்டர் சுற்றளவும், இதன் நடுப்பகுதி 240 செ.மீ. சுற்றளவு கொண்டதாக உள்ளது.

நிலத்தடியில் புதைத்து விடுவார்கள்


தாழியின் கழுத்துப்பகுதிக்கு சற்றுக்கீழ் ஒரு கயிறு போன்ற அமைப்பு உள்ளது. இந்த கயிற்றின் இரு முனைகளும் சேரும் இடத்தில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு கீழ் பகுதியை நோக்கி 10 செ.மீ. இறங்குவது போல் அமைந்துள்ளது. இதன் இடைவெளியில் ஒரு சிறுத்துண்டு மேல் நோக்கி செல்வதுப்போல் இருக்கிறது. இது இறந்தவரின் ஆன்மா வெளியேறுவதை குறிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய மண்பாண்டத்தில் இறந்தவர்களின் உடல் அல்லது எலும்புகளோடு, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து நிலத்தடியில் புதைத்து விடுவார்கள். பின்னர் அதன் மேல் பகுதியில் பாறைகளை கொண்டு மூடிவிடுவார்கள். இந்த தாழி கிடைத்ததன் மூலமாக இப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததும், அவர்கள் தொன்மையான நாகரிகத்தை பின்பற்றியதும் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story