தனியார் பள்ளிகளுக்கு ரூ.200 கோடியை அரசு வழங்க வேண்டும் மெட்ரிக் பள்ளி சங்க பொதுச்செயலாளர் பேட்டி


தனியார் பள்ளிகளுக்கு ரூ.200 கோடியை அரசு வழங்க வேண்டும் மெட்ரிக் பள்ளி சங்க பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு தனியார் பள்ளிகளுக்கு ரூ.200 கோடியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளி சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறினார்.

திருவாரூர்,

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி சங்கத்தின் சார்பில் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருவாரூர் கஸ்தூரிபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு பள்ளிகளை நடத்துவது மற்றும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து கருத்துகளை வழங்கினார். பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.200 கோடி

கடந்த 2016-17-ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடியை உடனடியாக அரசு வழங்கிட வேண்டும். நகர மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழைய பள்ளி கட்டிடங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக அங்கீகாரமுள்ள பள்ளிகளுக்கு நிரந்தர அங்கிகாரம் வழங்க வேண்டும், புதிய பாடத் திட்டத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே போன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்ககு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story