4 பவுன் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொலை மாட்டு தரகர் கைது
எருமப்பட்டி அருகே 4 பவுன் நகைக்காக மூதாட்டியை வெட்டிக்கொன்ற மாட்டு தரகரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வருதராஜபுரம் கஸ்தூரிப்பட்டியை சேர்ந்தவர் கோவண்ணன். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது75). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கோவண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வெள்ளையம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வெள்ளையம்மாள் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கட்டிலில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வெள்ளையம்மாளின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த மாட்டு தரகர் பெரியசாமி (58) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது பெரியசாமி, மூதாட்டியிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வியாபாரத்திற்காக ரூ.50 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வெள்ளையம்மாளை கோடரியால் தலையில் வெட்டினார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் அவர் அணிந்திருந்த 2 பவுன் நகை, 2 தங்க வளையல் என மொத்தம் 4 பவுன் நகையை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு தரகர் பெரியசாமியை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கோடரியை போலீசார் கைப்பற்றினர். 4 பவுன் நகைக்காக மூதாட்டியை மாட்டு தரகர் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story