பேரையூர் தாலுகாவில் விவசாயிகளுக்கு ரூ.19 கோடி இழப்பீடு


பேரையூர் தாலுகாவில் விவசாயிகளுக்கு ரூ.19 கோடி இழப்பீடு
x
தினத்தந்தி 27 Feb 2018 3:15 AM IST (Updated: 27 Feb 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் தாலுகாவில் மானாவாரி விவசாயிகளுக்கு ரூ.19 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

பேரையூர்,

பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் கடந்த ஆண்டில் மானாவாரியில் பருத்தி, மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து மற்றும் நவதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. செடிகள் ஓரளவு வளர்ந்த நிலையில் பருவமழை பெய்யாத நிலையில் பல்வேறு இடங்களில் செடிகள் கருகின.

முன்னதாக பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தனர். உரிய இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஆன நிலையில் இதுகுறித்து விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் பேரையூர் தாலுகாவில் உள்ள இரு ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு அனுப்பப்படும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story