அரியலூர் மாவட்ட கலெக்டராக விஜயலட்சுமி பொறுப்பேற்பு


அரியலூர் மாவட்ட கலெக்டராக விஜயலட்சுமி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட கலெக்டராக விஜய லட்சுமி பொறுப்பேற்று கொண்டார். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தப் போவதாக கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்து வந்த லட்சுமி பிரியா வணிகவரிகள் இணை கமிஷனராக (அமலாக்கம்) பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.

மேலும் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) பொறுப்பு வகித்து வந்த விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட கலெக்டராக நிய மனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் விஜயலட்சுமி பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத் தார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட கலெக்டருக்கு, அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத்தின் சார் கலெக்டராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையராக வும், ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி, பெருநகர சென்னை மாநக ராட்சியில் துணை ஆணைய ராக (சுகாதாரம்) பணியாற்றி, தற்போது மாவட்ட கலெக்டராக அரியலூரில் பொறுப்பேற்றுள் ளேன்.

அரியலூர் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில் மக்கள் நலன் காக்க பணிகள் மேம்படுத்தப்படவும், கல்வித்துறையில் மேலும் வளர்ச்சி அடையவும், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்துவேன் என்று கூறினார். 

Next Story