தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக மலர்விழி பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக மலர்விழி நேற்று பொறுப்பேற்று கொண்டார். இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த விவேகானந்தன் கனிமவளத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த மலர்விழி தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டர் மலர்விழி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் மலர்விழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாய மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு உள்ளிட்ட முன்னோடி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்பின்மையால் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இளைஞர்கள் வேலை தேடி இடம் பெயர்வது முக்கிய பிரச்சினையாக உள்ளது. தொழில்நகரமான திருப்பூரில் பணிபுரியும் திறன்மிக்க தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், அதன்மூலம் வேலைக்காக இடம் பெயர்தலை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் நான் கலெக்டராக பணிபுரிந்தபோது காதுகேட்கும் திறன் குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.
இந்த பிரச்சினையை தொடக்க கட்டத்திலேயே கண்டறிய முதல்-அமைச்சரின் 110-விதியின் கீழ் 10 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தர்மபுரி மாவட்டத்திலும் இத்தகைய பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இங்கும் அதுபோன்ற பரிசோதனை மையங்களை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை பெற கோரிக்கைகள் வைக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

Related Tags :
Next Story