ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பவானிசாகர்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சத்தியமங்கலம் பகுதியில் தினகரன் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தினகரன் அணியின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில், நகர செயலாளர் டி.கே.ஈஸ்வரன் சார்பில் கே.என்.பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண குடிலில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது. சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க சீனிவாசன், தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எம்.திருமூர்த்தி, வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் காடகநல்லி எம்.ரவிக்குமார், பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் எஸ்.செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை செயலாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், கடம்பூர் பகுதியில் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா பேரவை சார்பில் கவுந்தப்பாடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 180 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கினார். பயனாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து சின்னியம்பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.
அப்போது சின்னியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் நவீன் என்கிற நவநீதகிருஷ்ணன், ஆவின் இயக்குனர் அசோக், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சின்னசாமி, 46 புதூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பிரகாஷ், ஒன்றிய துணைச்செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் உடன் இருந்தார்கள்.

Related Tags :
Next Story