சிக்னலில் பலூன் விற்றுக்கொண்டிருந்த சிறுவன் பெஸ்ட் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி


சிக்னலில் பலூன் விற்றுக்கொண்டிருந்த சிறுவன் பெஸ்ட் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 27 Feb 2018 3:45 AM IST (Updated: 27 Feb 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

சிக்னலில் பலூன் விற்றுக்கொண்டிருந்த சிறுவன் பெஸ்ட் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மும்பை,

மும்பை, காந்திவிலி மேற்கு எம்.ஜி. ரோடு பகுதியில் ரோட்டோரம் வசித்து வருபவர் போஸ்லே. இவரது மகன் வீரா(வயது7). சிறுவன் நேற்றுமுன்தினம் மதியம் எம்.ஜி. ரோடு சிக்னல் பகுதியில் பலூன் விற்றுக்கொண்டு இருந்தான். அப்போது, அங்கு போரிவிலியில் இருந்து காந்திவிலி செல்லும் பெஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது.

அப்போது சிறுவன் பஸ் அருகே நின்று சிக்னலில் நின்ற வாகன ஓட்டிகளிடம் பலூன் விற்றதாக தெரிகிறது.

இந்தநிலையில் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததை அடுத்து, பெஸ்ட் பஸ் அங்கிருந்து கிளம்பியது. அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் வீரா மீது பஸ் மோதி யது. இதில், கீழே விழுந்தபோது பஸ்சின் பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது.

இந்த சம்பவத்தில் உடல் நசுங்கிய அவனை போலீசார் மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் வீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெஸ்ட் பஸ் டிரைவர் கடேக்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story