கோரேகாவில் வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


கோரேகாவில் வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 27 Feb 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

கோரேகாவில், வாலிபரை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை வடக்கு மண்டல போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜய் மோட்லிங். இவர் கோரேகாவ் கிழக்கு, நியு மகாடா காலனியில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு ரூ.3½ லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இவர் கடனை வசூலிக்க அங்கு சென்று உள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடம் கடன் வாங்கியவரின் மகன் சாகித் ஷிபாத்தை(வயது29) கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மோட்லிங் போலீஸ் சீருடையில் வாலிபரை கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் தவறு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பணி நேரத்தில் கடன் வசூல் செய்ய சென்று வாலிபரை தாக்கியதற்காக சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மோட்லிங் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story