எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 1826 பணியிடங்கள் நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 1826 பணியிடங்கள் நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 27 Feb 2018 11:06 AM IST (Updated: 27 Feb 2018 11:06 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 1826 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 1826 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் மருத்துவமனை- கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் உள்ள எய்ம்ஸ் மையங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. குறிப்பாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 1126 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். போபால் கிளையில் நர்சிங் ஆபீசர் பணிக்கு 700 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

ஸ்டாப் நர்ஸ்

ரிஷிகேஷ் எய்ம்ஸ் கிளையில் 1126 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு 21 வயது பூர்த்தி அடைந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

நர்சிங் ஆபீசர்

மற்றொரு அறிவிப்பின்படி போபால் எய்ம்ஸ் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு 700 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதில் கிரேட்-1 தரத்தில் 100 பணியிடங் களும், கிரேடு-2 தரத்தில் 600 பணியிடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கிரேடு-2 பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. நர்சிங்-4 ஆண்டு படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, திறமைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு 20-3-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story