விமான நிறுவனத்தில் 500 வேலை
இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய பொதுத்துறை விமான நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தின் வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் ‘கேபின் குரூவ்’ (சேவை பணியாளர்கள்) பணிகளுக்கு அனுபவமுள்ளவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் வடக்கு மண்டலமான டெல்லியில் 450 பணியிடங்களும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மும்பையில் 50 பணியிடங்களும் உள்ளன. ஆண்களுக்கு 163 பணியிடங்களும், பெண்களுக்கு 337 பணியிடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் இனி...
விண்ணப்பதாரர்கள் 12-3-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்பட வேண்டும்.
கல்வித்தகுதி:
12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12-3-2018-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.airindia.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Related Tags :
Next Story