கணிதத்தில் முழுமதிப்பெண் பெறுவது எப்படி?
எளிமையாக மாணவர்களை நூற்றுக்கு நூறு வாங்க வைக்கும் பாடம், கணிதப் பாடம்.
எளிமையாக மாணவர்களை நூற்றுக்கு நூறு வாங்க வைக்கும் பாடம், கணிதப் பாடம். முன்பெல்லாம் கணிதப் பாடத்தில் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை இருந்தது. மற்ற பாடங்களில் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அந்த விளக்க முறைகள் மாறும்போது மதிப்பெண் சதவீதத்தை மாற்றுவதாக இருந்தது. கணிதத்தில் மட்டுமே படிநிலை சரியாக இருந்தால் விடையும் மாறாமல் சரியாக வரும். எனவே இதில் முழு மதிப்பெண் சாத்தியங்கள் மிகுதியாக இருந்தது. இப்போது கணிதம் மட்டுமல்லாமல் பெரும்பாலான பாடங்களில் முழுமதிப்பெண் பெற முடிகிறது. இருந்தாலும், கணிதப் பாடத்தில் சின்னச் சின்ன தவறுகளால் முழு மதிப்பெண் பெறாமல் தவற விடுபவர்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி அடிக்கடி நிகழும் தவறுகளை ஆசிரியர் குழு ஒன்று பட்டியலிட்டுள்ளது...
* கணிதத்தில் அணிகள் பற்றிய வினாக்கள் கண்டிப்பாக இடம் பெறும். ஒரு மதிப்பெண் வினா முதல், 20 மதிப்பெண் வினா வரை அனைத்திலும் அணிகள் கணக்கு தவறாமல் இடம் பெறுவதை மாதிரி வினாத்தாள்களை உற்று நோக்கினால் கவனிக்கலாம். அணிகள் கணக்கு எளிதில் குழப்பத்தை தந்துவிடக்கூடியது. அணிகளை எழுதும்போது வரிசை (ரோ) மற்றும் பத்தி (காலம்) மாறாமல் எழுத வேண்டும். சரியாக வரிசை - பத்தி எழுதுவது உங்களுக்கு குழப்பம் தராமல் விடை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும். வரிசை, காலம் மாறியிருந்தால் விடைத்தாளை திருத்துபவர் அதை தவறாக கருத வாய்ப்பு உண்டு. இதனால் மதிப்பெண் பறிபோகலாம். எனவே வரிசை, பத்தியை கவனமாக எழுதுங்கள்.
* அணி கணக்குகளிலேயே தீர் மானித்தல் கணக்குகளும் குழப்பத்தை தரும் கணக்குகளாகும். இதிலும் எதை எப்படி அணிப்படுத்துவது, வரிசை, காலத்தை மாற்றி அமைப்பது, எதை, எதனால் பெருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது குழப்பம் நேர்வது உண்டு. இது நேரத்தை குடித்துவிடுவதுடன், தவறான விடைக்கும் வழிவகுக்கும் என்பதால் தீர்மானித்தல் கணக் கிலும் அதிக கவனம் வேண்டும்.
* தொகை காணல் (இன்டக்ரல்) கணக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதிலும் மாணவர்கள் மிகுதியாக தவறு செய்வார்கள். பொதுவான தொகை அளவீடுகளை எழுதிப் பார்த்து மனதில் பதிந்து வைத்திருப்பது, இந்த தொகை கணக்கை எளிதாக தீர்க்க உதவும்.
* கோணங்களின் அடிப்படையில் வரைபடம் வரைந்து வெட்டும் பகுதி கண்டறிந்து தீர்க்கப்பட வேண்டிய கணக்குகளிலும் நிறைய மாணவர்கள் தவறு செய்வார்கள். கோணங்களை மாற்றி வரைவது, நிழல் இட வேண்டிய பகுதிகளை மறந்துவிடுவது அல்லது மாற்றிவிடுவது முழு மதிப்பெண்களை குறைத்துவிடும். எனவே இந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
* வேறு சில வரைபட கணக்குகளான வெக்டர் அல்ஜிப்ரா, 3டி ஜியாமெட்ரி ஆகியவற்றிலும் பலர் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துபோவது உண்டு. அதாவது கதிர்களை வரைந்துவிட்டு கதிர் செல்லும் திசையை அம்புமுனையிட்டு குறிக்காமல் வெறும் கோடாகவே விட்டுவிடுவதுண்டு, இதுபோல வரை படத்திலும் அச்சு அளவு மற்றும் திசையை சரியாக குறிப்பிட வேண்டும். அதுவே முழு மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும்.
* ‘தீட்டா’ கணக்குகளிலும், ‘லாக்’ கணக்குகளிலும் இதுபோல எளிதாக தவறு நிகழும் வாய்ப்புகள் உண்டு. ஒன்றை பிரதியிட்டு மதிப்பை கண்டு பிடிக்க தவறான இடத்தில் குறிப்பிடுதல், தலைகீழாக மாற்றி குறிப்பிடுதல் என சிறு தவறை இழைத்துவிடுவதால், இறுதியில் விடை வராமல் சுற்ற வைத்துவிடும். இதுபோன்ற சின்னச்சின்ன தவறுகளை தவிர்த்தால் முழு மதிப்பெண் நிச்சயம்.
* இதுபோலவே அனைத்து கணக்கு களிலும் விடை கண்டுபிடிக்கும் படிநிலைகளில்தான் பெரும்பாலானவர்கள் தவறு செய்வது உண்டு. படிநிலை தவறாக இருந்து விடை சரியாக வந்தாலும், விடை சரியாக வந்து, படிநிலை சரியாக அமையாவிட்டாலும் முழு மதிப்பெண்ணை இழக்க நேரிடும். எனவே ஒரு மதிப்பெண் வினா முதல் அனைத்து கணித வினாக்களுக்கும் படிநிலையும், விடையும் சரியாக அமைந்துள்ளதா? என்பதை ஒருமுறை சோதித்துப் பாருங்கள்.
இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டால் நீங்களும் கணிதத்தில் 100-க்கு 100 வாங்க முடியும்!

Related Tags :
Next Story