அரிய நோய்கள் தினம்
மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஏனென்றால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிப்ரவரி 29-ந்தேதி வருவதால் அரிய நோய் தினத்துக்கு இந்நாள் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரிய வகை நோய்கள் என்று எப்படி சொல்வது? இது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. அமெரிக்க அரியநோய் சட்ட விதிப்படி 1,500 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஜப்பானில் 2 ஆயிரத்து 500 பேரில் ஒருவரும், ஜரோப்பாவில் 2 ஆயிரம் பேரில் ஒருவரும் பாதிக்கப்பட்டு இருந்தால், அது அரிய நோய் என்று கருதப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் படி 1000-ல் ஒருவருக்கு வந்தால், அது அரிய நோயாகும். இந்தியாவில் அரிய நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம் குடும்ப உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் அரியநோய்களுடன் 300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. சில நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்யும் போது ரத்த அணுக்கள் மாறுப்பட்ட நிலையில் இருக்கும். உடனே மருத்துவரிடம் எடுத்து சென்று காண்பித்தால் இது ஒரு அரிய வகை நோய் என்று பல்வேறு பரிசோதனைகளை செய்து வியாதியை உறுதி செய்வார். ஆகவே பரிசோதனைகளை முறையாக செய்தால் நோயின் தன்மையை அறிய முடியும். உதாரணமாக சிக்கில்செல் அனிமியா, ஹீமோபிலியா, தாலசிமீயா போன்றவை ரத்த சம்பந்தப்பட்ட அரிய நோய்கள். இந்த ஆண்டு அரிய நோய் தினத்தின் இலக்கு ஆராய்ச்சி செய்வது. ரத்த பரிசோதனை, மரபணுக்கள் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், அதற்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளாததும் அரிய நோய்களை குணப்படுத்துவதற்கு முடியாத காரணமாக இருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு வைத்தியமே இல்லை என்று மனமுடைந்து தற்கொலை செய்வது, குடும்பத்தைவிட்டு விரட்டி விடுவது, ஆதரவற்ற இல்லத்தில் விடுவது போன்றவை இன்று மருத்துவ ஆராய்ச்சிக்கு சவாலாக உள்ளது.
- அருள்செல்வம், ரத்த பரிசோதனை நிபுணர்

Related Tags :
Next Story