அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குமரியை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும்
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குமரியை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்று மருத்துவ அதிகாரி வி.பி.துரை பேசினார்.
நாகர்கோவில்,
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24–ந் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, பாடல் போட்டி ஆகிய போட்டிகள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காசநோய் மையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரியும், காசநோய் தடுப்பு துணை இயக்குனருமான டாக்டர் வி.பி.துரை தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் காசநோயால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் மரணம் அடைகிறார்கள். 3 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை காசநோய் விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நெஞ்சக நோய் மையம் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ– மாணவிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் காசநோயாளிகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. அதே சமயம் காசநோய் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2006–ம் ஆண்டில் 15 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனை செய்ததில் குமரி மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2600–ஆக இருந்தது. ஆனால் கடந்த 2017–ம் ஆண்டில் 28 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனை செய்ததில் 1300 முதல் 1400 பேர்தான் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் காசநோயாளிகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குமரியை காசநோய் இல்லாத மாவட்டமாக கண்டிப்பாக மாற்ற முடியும்.
இவ்வாறு துணை இயக்குனர் துரை பேசினார்.
முன்னதாக வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். இதில் டாக்டர்கள் ராஜ்குமார், பிரதீப்குமார், ரமாமாலினி, மருத்துவ துறையை சேர்ந்த முத்துசாமி, விஜயாம்பிகா, பிரேமலதா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த போட்டிகளில் 21 கல்லூரிகளைச் சேர்ந்த 135 மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) பள்ளி மாணவ– மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாடல் போட்டிகள் நடைபெறுகின்றன.

Related Tags :
Next Story