நெல்லையில் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பேராசிரியர் கொலையில் 2 பேர் கைது வக்கீல்–டாக்டர் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் வெடிகுண்டு வீசி பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லையில் வெடிகுண்டு வீசி பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், வக்கீல்–டாக்டர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியர்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்துள்ளது கொடியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார் (வயது 56), அ.தி.மு.க. பிரமுகர். இவர் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அருகில் அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி குடியேறினார்.
இதே வீட்டில் குமாரின் மூத்த மகள் அனுசுயா தனது கணவர் செந்தில்குமார் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். எம்.இ. என்ஜினீயரிங் படித்துள்ள செந்தில்குமார் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
வெடிகுண்டு வீசி கொலை
நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் செந்தில்குமார் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவு மீதும், வீட்டின் உள்ளேயும் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த குண்டு வெடிப்பில் வீட்டுக்குள் இருந்த செந்தில்குமார், அவரது மனைவி அனுசுயா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் நிலைகுலைந்தனர்.
ஆனால், வீட்டுக்குள் புகுந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலப்பிரச்சினை தொடர்பாக செந்தில்குமாரின் மாமனார் குமாரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டு இருந்ததும், ஆள் மாறாட்டத்தில் அந்த கும்பல் குமாருக்கு பதில் பேராசிரியர் செந்தில்குமாரை கொலை செய்து விட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
நிலப்பிரச்சினை
அதாவது, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் 3 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை கொடியன்குளம் குமாருக்கு ‘பவர்’ பத்திரம் எழுதி கொடுத்து உள்ளனர். பின்னர் அந்த நிலத்தை நெல்லையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்காக முன்னதாக பதிவு செய்யப்பட்ட, பவர் பத்திரத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் குமார், தான் பவர் பத்திரம் எழுதி வாங்கியபோது நிலத்துக்கு உரிய பணத்தை கொடுத்து விட்டதால், அந்த நிலம் தனக்கு சொந்தம் என்று கூறினார்.
இது தொடர்பாக 2 தரப்புக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் பாலமுருகன் தனது உறவினரான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பிரச்சினை குறித்து கூறினார். இதையடுத்து முக்கிய பிரமுகரின் தரப்பினர் கொடியன்குளம் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது குமார் மிரட்டப்பட்டு உள்ளார். இந்த நிலையில்தான் குமாரை கொலை செய்ய வந்த கும்பல் ஆள்மாறாட்டத்தில் பேராசிரியர் செந்தில்குமாரை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2 பேர் கைது
இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ராஜசேகர் (வயது 30), நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அஸ்வின் (26) ஆகிய 2 பேர் பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
போலீசார் அவரிடளிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவும், எங்கள் நண்பர்கள் சிலர் கூறியதாலும் இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர். அவர்களை நேற்று ஐகிரவுண்டு போலீசார் கைது செய்தனர்.
7 பேருக்கு வலைவீச்சு
கைதான ராஜசேகர் மீது 3 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் விசாரித்ததில் முக்கிய பிரமுகர்கள் 3 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராக்கெட் ராஜா, அவரது அண்ணன் வக்கீல் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடியதாக 4 பேர் என மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2–வது நாளாக உடலை வாங்க மறுப்பு
கொலை செய்யப்பட்ட பேராசிரியர் செந்தில்குமார் உடல் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலை நேற்று 2–வது நாளாக வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். செந்தில்குமார் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். செந்தில்குமார் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வீட்டு முன்பு உறவினர்கள் கூட்டமாக அமர்ந்துள்ளனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி மற்றும் அண்ணா நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story