ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்து தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்து தரக்கோரி நாகையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உயரம் தடைப்பட்டோர் சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழு உறுப்பினர் சிக்கந்தர், மாவட்ட இணை செயலாளர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் வாங்குவதில் உள்ள சிரமங்களை கலைய வேண்டும். ரெயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து ரெயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்ல தனி நடைமேடை அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு இலவச வாகன நிறுத்தம் அமைத்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க தனி அறை வசதி செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு பெட்டி குறித்து தெளிவான அறிவிப்பு செய்ய வேண்டும். ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும். ரெயில் நிலைய அளவில் நலன் கமிட்டியில் மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் வட்ட நிர்வாகிகள் சுகுமாரன், செந்தில், தவமணி, சண்முகநாதன், பன்னீர்செல்வம், சந்தானம், முத்துலட்சுமி, நாகேந்திரன், அருண்ராஜ், சண்முகம், இளையபெருமாள், அய்யாக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நாகை ரெயில் நிலைய அதிகாரியிடம் கோரிக்கை மனுவை மாற்றுத்திறனாளிகள் வழங்கினர்.

Related Tags :
Next Story