மத்திய மந்திரிகள் பங்கேற்ற விழாவில் சமஸ்கிருத பாடல்: சென்னை ஐ.ஐ.டி. முன்பு த.மா.கா. ஆர்ப்பாட்டம்
சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் நேற்று முன்தினம் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருதத்தில் இறை வணக்க பாடல் ஒலிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் நேற்று முன்தினம் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருதத்தில் இறை வணக்க பாடல் ஒலிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் சென்னை ஐ.ஐ.டி. முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
த.மா.கா. இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கக்கன் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய மந்திரிகள் பங்கேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருத திணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசையும், ஐ.ஐ.டி. நிர்வாகத்தையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது”, என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து கோட்டூபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story