ஒரு தலைக்காதலால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
திருமங்கலம் அருகே ஒரு தலைக்காதலால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த மணிபாண்டி- பேச்சியம்மாள் தம்பதியின் மகளான 9-ம் வகுப்பு பள்ளி மாணவி சித்ராதேவியை ஒருதலையாக காதலித்து தொந்தரவு கொடுத்து வந்தார். புகாரின்பேரில் போலீசார் பாலமுருகனை எச்சரித்தனர்.
கடந்த 16-ந்தேதி சித்ராதேவி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு வந்த பாலமுருகன் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டார். பின்பு அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சித்ராதேவி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், மாதர் சங்கத்தினர் ஆஸ்பத்திரி முன் திரண்டு மாணவியின் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து கலெக்டர் நேரில் வரவேண்டும் எனவும், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின்னர் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை விசா ரணைக்காக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் பின்பு அவர்களை விடுவித்தனர். மாலை 4 மணியளவில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர் களிடம் வழங்கப்பட்டது.
மாணவி இறந்து விட்டதால் பாலமுருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story