சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், மத்திய மந்திரி பேச்சு
சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
திருவொற்றியூர்,
மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் பெட்ரோலிய கழிவுகளை பயன்படுத்தி டீசல், நாப்தா, எரிவாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மிகு எண்ணெய் மேம்படுத்தும் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
மணலி சி.பி.சி.எல். நிறுவனம் இந்த பகுதியின் மிக பெரிய அடையாளம். இங்கு தயாரிக்கப்படும் பெட்ரோலிய பொருட்கள் மூலம் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. பெட்ரோலிய துறையில் நாடு 14 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் ரூ.27 ஆயிரம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்படும் போது தமிழகம் மட்டும் இன்றி பிற தென் மாநிலங்களின் பெட்ரோலிய தேவைகளும் பூர்த்தியாகும்.
எண்ணூர் துறைமுகத்தில் உள்ள எல்.அன்.டி. துறைமுகத்தில் இருந்து குழாய்கள் மூலம் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு வர அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்பும் அவசியம்.
இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது வேலைவாய்ப்பும், வளர்ச்சியும் பெருகும். சரியான நேரத்தில் சி.பி.சி.எல் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் களின் கோரிக்கையை ஏற்று சி.எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கு பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பேசினார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகப்பட்டினத்தில் ஏற்கனவே ஒரு மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அதை 10 மில்லியன் டன் ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் ஏற்ற, இறக்கத்திற்கு எற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர அனைத்து மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story