கூடுவாஞ்சேரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி


கூடுவாஞ்சேரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
x
தினத்தந்தி 28 Feb 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானான்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பலராமன் தெருவை சேர்ந்தவர் முரளி. இவர் பிரியாணி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கிரிதேஷ் (வயது 6). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் மாடியில் கிரிதேஷ் உள்பட சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது கிரிதேஷின் செருப்பு ஜன்னல் மேல் உள்ள சிமெண்டு தளத்தின் மீது தவறி விழுந்தது. செருப்பை எடுக்க முயன்ற போது கிரிதேஷ் மாடியில் இருந்து தவறி விழுந்தான்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த கிரிதேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிதேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story