திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து சாலை மறியல்
திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 26). வக்கீல். இவர் தனது மாமா பானுபேகன் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதியன்று இவரது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 15 பேர் கடையின் உள்ளே சத்தம்போட்டு கொண்டிருந்தனர். இதை பார்த்த பானுபேகன் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பானுபேகனை கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த வக்கீல் பாலச்சந்திரனையும், அவரது உறவினர்களான பார்த்திபன், ரூபக்குமார் ஆகியோரையும் அவர்கள் கையாலும் கத்தியாலும் தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த வக்கீல் பாலச்சந்திரன் உள்பட 4 பேரும் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மணவாளநகர் போலீசார் மேற்கண்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று அனைத்து வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் ஏராளமானோர் வக்கீல் பாலச்சந்திரனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்யவேண்டும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோர்ட்டை ஒரு நாள் புறக்கணித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான கோர்ட்டு வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வக்கீல்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story