காவல் ஆய்வாளர் அலுவலகம் புறக்காவல் நிலையம் கொண்டு வரப்படும்
மங்களபுரம், ஆயில்பட்டி போலீஸ் நிலையங்களுக்கு என்று தனியாக காவல் ஆய்வாளர் அலுவலகமும், முள்ளுக்குறிச்சியில் புறக்காவல் நிலையமும் கொண்டு வரப்படும் என்று முள்ளுக்குறிச்சியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா கூறினார்.
மங்களபுரம், ஆயில்பட்டி போலீஸ் நிலையங்களுக்கு
காவல் ஆய்வாளர் அலுவலகம், புறக்காவல் நிலையம் கொண்டு வரப்படும்
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேச்சு
முள்ளுக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியபோது எடுத்த படம்.
ராசிபுரம்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முள்ளுக்குறிச்சி பஸ் நிலையம் அருகே நடந்தது. கூட்டத்திற்கு நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.கே.பொன்னுசாமி தலைமை தாங்கினார். ராசிபுரம் ஒன்றிய செயலாளர் காளியப்பன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் வையாபுரி, மங்களபுரம் ஊராட்சி செயலாளர் ஜோதிலிங்கம், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பொன்.அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, தலைமைக் கழக பேச்சாளர் ஜீவா கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலாவதி, சாந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சரவணன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் கணேசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள்.
தமிழகத்தில் 1 லட்சம் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி சென்னையில் நடந்த விழாவில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. என்பது இரும்பு கோட்டை. அதில் காற்று கூட புக முடியாது. அதை பல சந்தர்ப்பங்களில் நாம் நிரூபித்து காட்டியுள்ளோம். மக்களை தேடி சென்று மக்கள் பணியாற்றும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. ஆகும். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் எதிரிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் மட்டும் அல்ல, எம்.பி. மற்றும் எம்எல்.ஏ. தேர்தல் எதுவானாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறவும், ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்கவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மங்களபுரம், ஆயில்பட்டி போலீஸ் நிலையங்களுக்கு என இனி தனியாக ஒரு காவல் ஆய்வாளர் அலுவலகம் பெற்றுத்தரவும், முள்ளுக்குறிச்சியில் புறக்காவல் நிலையம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Tags :
Next Story