உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரிக்கை
அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,

பயிர் காப்பீடு தொகை
கடந்த 2016–2017–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எட்டயபுரம் தாலுகா அயன்வடமலாபுரம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும், பாசி பயறு பயிரிட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரமும், தாப்பாத்தி கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.900–ம் பாசி பயறு பயிரிட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,900–ம், என்.வேடப்பட்டி கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும் காப்பீடு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அயன்வடமலாபுரம் கிராமத்தில் பயிரிட்ட பக்கத்து ஊர்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்த காப்பீடு தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
எனவே, விவசாயி எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை பாராமல், பயிர் சாகுபடி நடந்த கிராமத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் வெவ்வேறு விதமாக காப்பீடு தொகை வழங்காமல், குளறுபடியின்றி ஒரே விதமாக தொகையை பாரபட்சமின்றி அனைத்து கிராமங்களுக்கும் சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, முத்துலாபுரம் பகுதி விவசாயிகள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.
ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன், அனைத்துலக சாதி சமய பண்பாட்டு கழகம், 5–வது தூண் தலைவர் சங்கரலிங்கம், ஆதிமூலம், வெங்கடாசலம், மாரிசெல்வம், நாராயணசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story