அரசு பஸ் முகப்பு விளக்குகளை உடைத்த வாலிபர்கள் 4 பேர் கைது


அரசு பஸ் முகப்பு விளக்குகளை உடைத்த வாலிபர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் முகப்பு விளக்குகளை உடைத்த வாலிபர்கள் 4 பேர் கைது

பாடாலூர்,

துறையூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நக்கசேலம் வழியாக பெரம்பலூர் நோக்கி சென்றது. அப்போது நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த சோமு மகன் அருண் (வயது 22), முத்துசாமி மகன் தனபால் (31), முத்துசிகாமணி மகன் சக்திவேல் (27), பெரியசாமி மகன் வேல்முருகன் (29) ஆகியோர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் நோக்கி சென்ற அந்த பஸ் அவர்கள் மீது மோதுவது போல் சென்றது. இதில் ஆத்திரமடைந்த அருண் உள்பட 4 பேரும் சேர்ந்து பெரம்பலூரில் இருந்து மீண்டும் துறையூர் நோக்கி சென்ற அந்த பஸ்சின் முகப்பு விளக்குகளை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். இது குறித்து பஸ் டிரைவர் பழனிமுத்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அருண் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story