பட்டப்பகலில் துணிகரம்: மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). மீனவர். இவரது மனைவி முத்துலெட்சுமி (30). இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சக்தி என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் 2 பேரும் கோட்டைப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் கணேசன் நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு, முத்துலெட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு, கடை தெருவிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து விட்டு, கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன்நகை, ரூ.45 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து கணேசன் ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Related Tags :
Next Story