பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர்


பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

கரூர்,

கரூர் வெங்கமேட்டில் தங்கியிருந்த மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர். மேலும் பெண் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக வக்கீல் முருகனையும் கைது செய்தனர். 3 பேர் மீதான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறையில் இருந்து சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து வந்து கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தும், அதுவரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்தும் நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேரையும் போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். 

Next Story