பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்த தனி இடவசதி, தனி கழிவறை வசதி செய்து தர வேண்டும். நடக்க முடியாதவர்கள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ரெயில்களில் கூடுதல் பெட்டி, தனி இருக்கை வசதி மற்றும் தனி டிக்கெட் கவுண்டர் வசதி செய்து தர வேண்டும். ரெயில் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். திருவாரூர் நகர பொறுப்பாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் குருமூர்த்தி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முத்துப்பேட்டை நகர செயலாளர் தனசேகரன், ஒன்றிய செயலாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ரெயில்வே மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Related Tags :
Next Story