5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கவியரசன், அறவாழி, காளிதாஸ், மாவட்ட நிர்வாகிகள் அண்ணாதுரை, ரவிச்சந்திரன், மனோகரன் ஆகியோர் பேசினார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை உடனடியாக பெற்று தாமதம் இன்றி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வீட்டு வாடகை படியை மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும். முறையான பதவி உயர்வு இல்லாத பணியாளர் களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இருப்பது போல் உறுதிப்படுத்தப்பட்ட பதவி உயர்வு திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார். 

Next Story