சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம்: விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு மாநில அரசு உத்தரவு
பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,

சிறையில் சொகுசு வசதிகள்
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடியை அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் லஞ்சமாக பெற்றதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார். இதுகுறித்த அறிக்கையை அவர் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், ஊழல் ஒழிப்பு படை, லோக் அயுக்தா, மாநில அரசு, மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, சிறைத்துறையில் பணியாற்றிய அவர்கள் 2 பேரும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர். சத்திய நாராயணராவ் பணி ஓய்வு பெற்ற நிலையில், ரூபா ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஊர்க்காவல்படை கூடுதல் பொது கமாண்டோவாக பணியாற்றி வருகிறார். சிறைத்துறை முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறையில் சில முறைகேடுகள் நடப்பது பற்றி கூறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சத்திய நாராயணராவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா? என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மாநில அரசு உத்தரவு
இந்த நிலையில் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஊழல் தடுப்பு படைக்கு, மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. உள்துறை துணை செயலாளர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், ‘ரூ.2 கோடியை லஞ்சமாக பெற்றுக் கொண்டு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டியது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையின் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும், இதே விவகாரத்தில் சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோர் தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனரா? என்பது குறித்து விசாரிக்க, ஆள்சேர்ப்பு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையின் கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story