விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். கடந்த கூட்டத்தின் போது, விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
விவசாயி ரங்கசாமி:- கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளை, அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். எந்த நிபந்தனையும் இன்றி விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் பல்வேறு சான்றிதழ்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர். எனவே கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிட்டா, அடங்கல் மட்டும் வைத்து குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குகின்றனர்.
கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பழனிவேல்:- ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் மட்டுமே சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. அதற்கு குறைவாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம், அதிகாரிகள் சான்றிதழ்கள் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி காமாட்சி சுந்தரம்:- முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிலக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான நெற்பயிர்கள் தற்போது தான் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பாசனத்துக்கு பயன்படுத்த வசதியாக 20 நாட்களுக்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
கலெக்டர்:- தற்போது விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி ராஜேந்திரன்:- பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் தடுப்பணை அமைத்து பழனி முருகன் கோவிலுக்கு தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தடுத்து பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கும் படி செய்ய வேண்டும்.
கலெக்டர்:- இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்ணீர் திறக்க மறுப்பு
விவசாயி ரசூல் முகைதீன்:- சித்தையன்கோட்டை அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனியார் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. அவர்கள், குளத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கின்றனர்.
கலெக்டர்:- இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி அசோகன்:- மருத்துவ குணம் கொண்ட கடுக் காயை வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பட்டா நிலங்களில் உள்ள கடுக்காய்களை உரிமையாளர்களே எடுத்து, வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முயன்றால் அதனை வனத்துறையினருடன், தனியார் சிலர் சேர்ந்துகொண்டு தடுக்கின்றனர்.
கலெக்டர்:- வனப்பகுதியில் உள்ள கடுக்காய்களை எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா நிலத்தில் உள்ள கடுக்காய்களை உரிமையாளர்களே எடுத்து விற்பனை செய்யலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கால்வாய், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, பயிர் காப்பீட்டு தொகை உள்பட பல கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்தனர். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story