அனைத்து பள்ளிகளிலும் 12-ம் வகுப்பு வரை மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்
அனைத்து வகையான பள்ளிகளிலும் 12-ம் வகுப்பு வரை மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து, கல்வி மந்திரி வினோத் தாவ்டே பேசினார்.
மும்பை,

மராத்தி பாடம் கட்டாயம்
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சட்டசபை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் பேசியதாவது:-
மராட்டியத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கவேண்டும். மராத்திய மொழி தினம் என்பதால் இன்றே (நேற்று) இதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றவேண்டும்.
இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை என்றால், மராத்தி மொழி அருங்காட்சியகங்களில் மட்டும் வைக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.
ஆங்கில வழியில் படித்து வந்த பல எம்.எல்.ஏ.க்கள் இங்கு உள்ளனர். அவர்கள் மராத்தியில் பேச திணறுகின்றனர். தாய்மொழியில் சரியாக பேச முடியாததால் இளம் மந்திரிகள் சட்டசபையில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். மராட்டியத்தில் இருக்கும் மக்கள் மராத்தியில் தான் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்தவித தவறுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு பரிசீலிக்கும்
இதற்கு பதில் அளித்து கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே பேசியதாவது:-
10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட எல்லா வகையான பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும். இது குறித்து மாநில கல்வி வாரியத்துடன் ஆலோசனை நடத்திய பின் இதை அமல்படுத்துவது குறித்து அரசு அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மராட்டியத்தில், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில் மட்டும் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story