நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக பிளேடால் வெட்டியவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக பிளேடால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2018 4:00 AM IST (Updated: 28 Feb 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக பிளேடால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக பிளேடால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

நடத்தையில் சந்தேகம்

மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது30). தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபாங்கி(27). இவர் வாஷியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சமீபகாலமாக விஜய், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

இதனால் விரக்தி அடைந்த சுபாங்கி கணவரை பிரிந்து, மான்கூர்டு சாத்தே நகரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.

சரமாரியாக வெட்டினார்

இந்தநிலையில் நேற்று காலை மான்கூர்டு ரெயில்நிலையம் அருகே விஜய், மனைவியை சந்தித்தார். அப்போது அவர் வழக்கம்போல மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜய் தான் வைத்திருந்த பிளேடால் மனைவியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சுபாங்கியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ய முயன்றதாக விஜயை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story