கார் மீது ஜீப் மோதிய கோர விபத்தில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் பரிதாப சாவு
சோலாப்பூரில் கார் மீது ஜீப் மோதிய கோர விபத்தில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
புனே,
சோலாப்பூரில் கார் மீது ஜீப் மோதிய கோர விபத்தில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காட்டுப்பன்றி குறுக்கே ஓடியதால் இந்த துயர விபத்து ஏற்பட்டது.
விபத்து
சோலாப்பூர்- துல்ஜாபூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. சோலாப்பூரில் உள்ள ஷீத்தல் ஓட்டல் அருகே ஜீப் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காட்டுப்பன்றி ஒன்று ரோட்டின் குறுக்கே ஓடிவந்தது.
இதை பார்த்ததும் டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க ஜீப்பை திருப்பி உள்ளார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரும், ஜீப்பும் உருக்குலைந்து போனது. மேலும் அந்த வாகனங்களில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். சிலர் சாலையில் தூக்கிவீசப்பட்டு கிடந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சோலாப்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
5 பேர் சாவு
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர்களில் 5 பேர் இறந்துவிட்டதாக கூறினர். மற்ற 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் முகமது அக்லாக்பாஷா(வயது26), ஜமீர் ஹூசைன்(32), திப்பு சுல்தான்(26), அப்துல் ஹூசைன்(53), அமீர் ஹம்சா(50) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களில் முகமது அக்லாக்பாஷா சோலாப்பூர் நகர போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story