போலீசார் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு கருத்து


போலீசார் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை,

போலீசார் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

தந்தை கொலை

நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சந்திப் குமார். கட்டுமான அதிபரான இவரது தந்தை சுனில்குமார் லொகாரியா மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சந்திப் குமாரும் முக்கிய சாட்சியாக உள்ளார்.

இந்த வழக்கில் சாட்சியாக உள்ளதால் அவரின் உயிருக்கு ஆபத்து இருந்தது. இதையடுத்து அவர் நவிமும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவரின் கோரிக்கையை கமிஷனர் ஏற்க மறுத்துவிட்டார். மேலும்அவரை கோபத்துடன் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சந்திப் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதிகாரி தன்னை திட்டியதற்கு சாட்சியாக ஒலிநாடாவையும் சமர்ப்பித்தார்.

மன்னிப்பு கேட்டார்

இந்த வழக்கு நீதிபதிகள் கவாய் மற்றும் பாரதி தாங்ரே அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நவிமும்பை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ போலீசார் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். போலீசார் பொதுமக்களுக்காக வேலை செய்பவர்கள். மக்களின் பிரச்சினைகளை போலீசார் காதுகொடுத்து கேட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Next Story