எறும்புகளை இயற்கை முறையில் விரட்டலாம்


எறும்புகளை இயற்கை முறையில் விரட்டலாம்
x
தினத்தந்தி 28 Feb 2018 11:31 AM IST (Updated: 28 Feb 2018 11:31 AM IST)
t-max-icont-min-icon

பொதுவாக எறும்புகளை அழிப்பதற்கு கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ்களை வாங்கிப் பயன்படுத்துவோம்.

பொதுவாக எறும்புகளை அழிப்பதற்கு கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதனால் எந்தவித பயன்களும் இல்லாமல் போய்விடுகின்றன. அதனால் முடிந்தவரை நம்முடைய வீட்டில் உள்ள இயற்கைப் பொருள்களைக் கொண்டே எறும்புகளை விரட்டுவது நல்லது.

எறும்புகளை விரட்டுவதற்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் சிறுசிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது துருவியோ போட்டு வைத்தால் எறும்புகள் வராமல் இருக்கும்.

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும். பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவி விட வேண்டும். இதனால் எறும்புகள் அதை சாப்பிட்டு இறந்துவிடும். சர்க்கரை டப்பாவில் சிறிது கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் தடுக்கப்படும்.

பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி வைத்தால், எறும்புகள் வராமல் இருக்கும். மேலும் வீட்டை துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால் எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

Next Story