தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மனைவி, மகனை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருப்பத்தூர்,
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை என்கிற அனுமுத்தன் (வயது 55), தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (45). இவர்களது மகன் தீபன் (23), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 19.12.03-ந் தேதி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மல்லிகாவை, அமாவாசை கத்தியால் குத்தினார். இதில் உயிர் பிழைத்த மல்லிகா மீண்டும் அமாவாசையுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் மல்லிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கடந்த 5.3.15-ந் தேதி கேபிள் வயரால் மல்லிகாவின் கழுத்தை இறுக்கியும், கத்தியால் குத்தியும், அமாவாசை கொலை செய்தார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் தீபனையும் கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அதன்பிறகு அவர், கத்தியால் தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அமாவாசையை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அமாவாசை உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமாவாசையை கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, மனைவி, மகனை கொலை செய்த அமாவாசைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story