விருதுநகரில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம், கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


விருதுநகரில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம், கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 March 2018 3:15 AM IST (Updated: 28 Feb 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (வயது 27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அரவிந்தன் (33) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொரு ட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

அரவிந்தன் சென்னையில் வசித்து வருகிறார். பிரசவத்திற்காக பாண்டிச்செல்வியை அரவிந்தன் அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பாண்டிச்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 6 வயது ஆகிறது கருத்து வேறுபாடு காரணமாக அரவிந்தன், பாண்டிச்செல்வியை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை.

இந்த நிலையில் அரவிந்தனுக்கு நெருங்கிய நண்பரிடம் பாண்டிச்செல்வி விசாரித்த போது அரவிந்தன் கடந்த 2011-ம் ஆண்டே அமுதா மகேஸ்வரி (30) என்ற பெண்ணை திருப்பரங்குன்றத்தில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த திருமணத்திற்கு அரவிந்தனின் தந்தை பன்னீர்செல்வம் (53), தாய் அமரஜோதி (50), சகோதரி மாதுரி (31) ஆகிய 3 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பாண்டிச்செல்வி, தனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட தனது கணவர் அரவிந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் பன்னீர்செல்வம், அமரஜோதி, சகோதரி மாதுரி மற்றும் 2-வது மனைவி அமுதா மகேஸ்வரி ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story