ரூ.8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை


ரூ.8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 1 March 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, அத்திமுட்லு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டமுகாம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தோட்டக்கலைதுணை இயக்குநர் அண்ணாமலை, தனித்துணை கலெக்டர் முத்தையன், மாவட்ட சமூக நலஅலுவலர் ரேவதி, கலால் உதவி இயக்குநர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 105 பயனாளிகளுக்கு உதவித்தொகை, பட்டாமாறுதல் என ரூ.30 லட்சத்து 58 ஆயிரத்து 615 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள 8 பாடப்பிரிவுகளில் 518 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரைஆலை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் வரும் கல்விஆண்டு முதல் மாணவர்கள் ரூ.2 ஆயிரம் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானதாகும். பாலக்கோட்டில் புதியஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரைஆலையில் புதிய கட்டிடம் கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.

இந்த முகாமில் 154 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை பரிசீலனைசெய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலதிட்டஉதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 888 தனிநபர் சுகாதார வளாகம் ரூ.142 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுபணிகள் நடைபெற்றுவருகிறது. கிராமபுறங்களில் உள்ள தாய்மார்கள், பொதுமக்கள் தனிநபர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பதுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும்.

இதில், பாலக்கோடு சர்க்கரைஆலைத்தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுதலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், கோவிந்தராஜ், பாலக்கோடு தாசில்தார் அருண்பிரசாத், வேளாண்மை பொறியியல்துறை உதவிபொறியாளர் பழனிவேல் உள்பட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story