தூத்துக்குடியில் விளையாட்டு வினையானது: உயர்அழுத்த மின்கம்பியை பிடித்த தொழிலாளி உடல் கருகி சாவு
தூத்துக்குடியில் மனைவி கண் முன்னே உயர்அழுத்த மின்கம்பியை பிடித்த தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மனைவி கண் முன்னே உயர்அழுத்த மின்கம்பியை பிடித்த தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டாக நடந்த இந்த சம்பவம் வினையில் முடிந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 22), தொழிலாளி. இவருக்கும், சுதா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. விக்னேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் தனது மனைவியுடன் அருகில் இருந்த உறவினர் வீட்டு மாடியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அந்த வீட்டு மாடியின் அருகே உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது.
உடல் கருகி சாவு
இந்த நிலையில் விக்னேஷ் தனது மனைவி சுதாவிடம், அந்த உயர்அழுத்த மின்கம்பியை பிடிக்கிறேன், பார் என்று கையை அதன் அருகில் கொண்டு சென்று விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விக்னேஷ் மின்கம்பியை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி தனது மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்த சுதா கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பலியான விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விளையாட்டாக நடந்த இந்த சம்பவம் வினையில் முடிந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story