மத்திய அரசும், கர்நாடக அரசும் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக கூட்டுசதி செய்கிறது’
மத்திய அரசும், கர்நாடக அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக கூட்டுசதி செய்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
விக்கிரவாண்டி,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் ஞானதேசிகன், வெங்கடேசன், கோவை தங்கம், விடியல் சேகர், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட தலைவர் தசரதன் வரவேற்றார்.
கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க தயார் செய்ய நிர்வாகிகளுக்கு ஜி.கே.வாசன் ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சி சங்கராச்சாரியார் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் கவர்னர் தனது சுற்றுப்பயணத்தை தவிர்க்க வேண்டும், சென்னை ஐ.ஐ.டி. யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. இதனை அருகில் உள்ள மாவட்ட பகுதிக்கு மாற்றுவதை தவிர்த்து சென்னை நகருக்குள் அமைத்தால் நல்லது.
மத்திய அரசும், கர்நாடக அரசும் சேர்ந்து கூட்டுசதி செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து ஒரு வாரம் ஆகியும் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
தமிழகத்தில் நகை பறிப்பு சம்பவம் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு வட மாநிலத்தவர்கள் முக்கியமாக குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இவர்களை காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூர் பகுதியில் நடந்து வரும் கொலை சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
Next Story