மானூர் அருகே மனுநீதி நாள் முகாம்: நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


மானூர் அருகே மனுநீதி நாள் முகாம்: நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

மானூர்,

மானூர் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம்


நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைகுளம் நரிக்குறவர் காலனியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நரிக்குறவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் 6 நரிக்குறவ மக்களுக்கு சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகளையும், 3 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் கடனுதவியும், ஒரு விவசாயிக்கு பால் பண்ணை அமைக்க ரூ.4½ லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

புதிய வீடுகள்

முன்னதாக, அந்த பகுதியில் நரிக்குறவ மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட 5 வீடுகளை பயனாளிகளுக்கும், மாலை நேர பயிற்சி முகாமுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, துணை கலெக்டர்கள் (பயிற்சி) மயில், லட்சுமிபிரியா, மானூர் தாசில்தார் மோகனா, மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரான்சிஸ் மகாராஜன், பிரம்மநாயகம், கங்கைகொண்டான் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், உக்கிரன்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாச்சலம், செயலாளர் முகமது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story