அரிசி வியாபாரியிடம் ரூ.95 லட்சம் மோசடி தலைமறைவாக இருந்த பருப்பு வியாபாரி கைது
திருச்சி அரிசி வியாபாரியிடம் ரூ.95¾ லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பருப்பு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் தஞ்சை சாலையை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது38). அரிசி மொத்த வியாபாரி. விருதுநகரை சேர்ந்தவர் சதாசிவம் (33). இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்ககிரிக்கு குடி பெயர்ந்தார். அங்கு சிறிய அளவில் மளிகை கடை வைத்து நடத்திய அவர் தற்போது அரிசி, பருப்பு போன்ற பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராசிபுரத்திலும் ஒரு வீடு உள்ளது. இந்த நிலையில் சதாசிவம் கடந்த 5.7.2015 முதல் 17.11.2015 வரை, அபுதாகீரிடம் இருந்து ரூ.2 கோடியே 67 லட்சத்து 72 ஆயிரத்து 150-க்கு அரிசி கொள்முதல் செய்தார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 97 ஆயிரத்து 210 கொடுத்து உள்ளார். மீதி ரூ.95 லட்சத்து 74 ஆயிரத்து 940 தரவில்லை.
இதைத்தொடர்ந்து மீதி பணத்தை தரும்படி அவரிடம் பல முறை கேட்ட போது பணம் தராமல் தட்டி கழித்து வந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பணம் தரமுடியாது என்று சதாசிவம் கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு அவர் தலை மறைவாகி விட்டார். இது குறித்து நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி அபுதாகீர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சதாசிவம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சதாசிவத்தை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று சதாசிவத்தை கைது செய்தனர். கைதான சதாசிவம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story