புளியங்குடியில் பரிதாபம் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை தேர்வு பயத்தில் விபரீத முடிவு


புளியங்குடியில் பரிதாபம் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை தேர்வு பயத்தில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 1 March 2018 2:15 AM IST (Updated: 1 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

புளியங்குடி,

புளியங்குடியில் தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

10-ம் வகுப்பு மாணவன்

நெல்லை மாவட்டம் புளியங்குடி கற்பகவீதி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து, காற்றாலை தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 16). இவன், அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளிக்கூடத்தில் அரசு பொதுத்தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக மாதிரி தேர்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தேர்வில் சில பாடங்களில் சக்திவேல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் வரக்கூடிய அரசு பொதுத்தேர்வை எப்படி எழுத போகிறேன் என்று சக மாணவர்களிடம் சக்திவேல் கூறி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் சோகமாக இருந்துள்ளான். இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கச் சென்ற அவன், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இன்று (வியாழக்கிழமை) 12-ம் வகுப்பு அரசு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியங்குடி பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story