அ.தி.மு.க.வை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை; ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு


அ.தி.மு.க.வை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை; ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை பற்றி பேச டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை என்று ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆவிக்கொளப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் மண்ணு, சிவசங்கரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, ஊராட்சி செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் துரைராஜ் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1½ கோடி தொண்டர்களுக்கு தலைவியாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நம்மிடம் இல்லை. இதற்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் தான். அந்த குடும்பத்தை மட்டும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தால், அவர் நம்மோடு இருந்திருப்பார். ராணுவ கட்டுப்பாட்டுடன் இந்த இயக்கத்தை ஜெயலலிதா வளர்த்தார். அதனால் தான் இன்றும் ஒரு தொண்டன் கூட மாற்றுகட்சிக்கு செல்லாமல் நம்மிடம் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உடைந்து போன அ.தி.மு.க. ஒன்று சேராது என தி.மு.க. கனவு கண்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஜெயலலிதாவின் எண்ணப்படி ஆட்சி நடத்தி வருகின்றனர். டி.டி.வி தினகரன் கட்சிக்கு துரோகம் செய்தவர். அவருக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்க்கட்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பேரம் பேசி தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைத்து வெற்றி பெற்ற தினகரன் அ.தி.மு.க.வை பற்றி பேச தகுதி இல்லை. காமராஜருக்கு பின் சாதாரண எந்த ஒரு தொண்டனும் எளிதில் சந்திக்கும் ஒரு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருகிறார். நடிகர்கள் சிவாஜி, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து வீழ்ந்ததுபோல் கமல்ஹாசனும் வீழ்வார்

இதில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி, பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.பார்த்தசாரதி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் மாரங்கியூர் இளங்கோவன், மாவட்ட அ.தி.மு.க. பாசறை செயலாளர் சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணகிரி, மாணவரணி ஒன்றிய செயலாளர் கண்ணன், விவசாயி அணி ஒன்றிய செயலாளர் துறிஞ்சிப்பட்டு முருகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏசுபாதம், பழனிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் லலிதா வெங்கடேசன், வெற்றி, அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்வராஜ், ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் ஆதம்ஷபி, ராணி, வக்கீல் கே.உமாசங்கர், பழங்கூர் குரு, நாதன்காடுவெட்டி சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Next Story