பெரம்பலூரை கலக்கிய பிக்பாக்கெட் திருடர்கள் 3 பேர் கைது
பெரம்பலூரை கலக்கிய பிக்பாக்கெட் திருடர்கள் 3 பேர் கைது அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் மனைவி ஷெரிபா (வயது 40). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டுக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஸ் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பாத்திரம் வியாபாரம் செய்வது போல் தள்ளுவண்டியில் வந்த 3 பேர் நைசாக, ஷெரிபாவின் பர்சை திருடி கொண்டு சென்றுவிட்டனர். பர்சில் நகை இருந்ததால் பதறிப்போன ஷெரிபா பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். இதே போல் அரணாரையை சேர்ந்த கிரிஷ் (30) என்பவர் தனது பர்சை, தள்ளுவண்டியுடன் வந்த சிலர் பிக்பாக்கெட் அடித்து விட்டதாக பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பல்வேறு பிக்பாக்கெட் புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தன. இதையடுத்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் பிக்பாக்கெட் திருடர்களை வலைவீசி தேடினர். மேலும் பிக்பாக்கெட் சம்பவம் நடந்த இடங்களை வைத்து முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது விசாரணையில் கிடைத்த செல்போன் எண்ணை கண்காணித்த போது அது திருச்சியில் இயக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் திருச்சிக்கு விரைந்து, பிக்பாக்கெட் திருடர்களான திருவண்ணாமலை மாவட்டம் காந்திநகரை சேர்ந்த விக்னேஷ் (23), பார்த்திபன் (29), விக்கி என்கிற விஷ்ணு (26) ஆகிய 3 பேரை பிடித்தனர். பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரித்த போது, பிக்பாக்கெட் அடிக்கும் போது அதில் ஏ.டி.எம் கார்டில் ரகசிய எண் எழுதப்பட்டிருந்தால் அதை வைத்து நூதன முறையில் பணம் எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு செயலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story