எனது கணவர் உடலை வாங்கிவர பணம் இல்லை
கர்நாடக சிறையில் தற்கொலை செய்து கொண்ட ‘சைக்கோ‘ ஜெய்சங்கரின் மனைவி உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர், எனது கணவர் உடலை வாங்கி வர எங்களிடம் பணம் இல்லை, என்றார்.
எடப்பாடி,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோணசமுத்திரம் பனங்காட்டூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஜெய்சங்கர் என்ற ‘சைக்கோ’ ஜெய்சங்கர் (வயது 40). லாரி டிரைவர்.
இவர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்று இவர் மீது 25-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஜெய்சங்கர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் பிளேடால் ஜெய்சங்கர் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சிறை அறையிலேயே துடிதுடித்து கொண்டிருந்தார். இதை சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜெய்சங்கரை மீட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஜெய்சங்கர் உடல் பெங்களூரு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
ஜெய்சங்கருக்கு பரமேஸ்வரி (38) என்ற மனைவியும், தேன்மொழி (14), ஜமுனாதேவி (13), பிரேமாவதி (10) என்ற 3 மகள்களும் உள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கர்நாடக போலீசார் எனது கணவரை அழைத்துச்சென்றனர். அதன்பின்னர் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. தற்போது எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். நான் 3 மகள்களுடன் கஷ்டப்பட்டு வருகிறேன். வறுமையில் வாடுகிறேன். போதிய உடை கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். கயிறு திரிக்கும் வேலை செய்து தான் குழந்தைகளை காப்பாற்றுகிறேன்.
இப்போது எனது கணவர் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை. எனது கணவர் உடலை வாங்கிச்செல்லும்படி கூறுகிறார்கள். ஆனால் கர்நாடகம் சென்று எனது கணவர் உடலை வாங்கி வர எங்களிடம் பணம் இல்லை. இதனால் நாங்கள் அங்கு செல்லவில்லை.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எனது உறவினர் அர்த்தனாரியிடம் என் மகன் ஜெய்சங்கர் போனில் பேசியுள்ளார். அப்போது வழக்கு முடிவுறும் நிலையில் உள்ளது. இதற்காக ரூ.25 ஆயிரம் ஏற்பாடு செய்யும்படி கூறினாராம். இந்தநிலையில் திடீரென எனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

Related Tags :
Next Story