தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
பாதுகாப்பு பயிற்சி
தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை விரிவாக்க கட்டுமான வளாகத்தில் லார்சன் அண்ட் டர்போ (எல் அண்ட் டி) கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது.
மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சிதம்பரநாதன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை நடத்தினார். அவர் பேசுகையில், இந்த கட்டுமான பணி, தொழிற்சாலையின் விரிவாக்கம் தொடர்பானது என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடன் பணி செய்ய வேண்டும். சிறு விபத்து கூட இல்லாமல் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றார். தொழிற்சாலை விரிவாக்க திட்டத்தின் தலைவர் முருகேசுவரன் பேசுகையில், விபத்துகள் இல்லாதநிலை உருவாக தொழிலாளர்கள் மத்தியில் பழக்க வழக்கம் மற்றும் மனப்பான்மை மாற்றம் ஏற்படுவது அவசியம் என்றார்.
125 தொழிலாளர்கள்
தொடர்ந்து தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வி.எஸ்.சரவணன், கோவில்பட்டி துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், நெல்லை உதவி இயக்குனர் மகேந்திர பூபதி ஆகியோர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விரிவான விளக்கம் அளித்தனர். பயிற்சி வகுப்பில் சுமார் 125 கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் துணை மேலாளர் (பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல்) கோவிந்தசாமி, துணை மேலாளர் (பாதுகாப்பு) ஜெயசெல்வன், மனித வள மேம்பாடு அலுவலர் பிரான்சிஸ் ரீகன், விரிவாக்க திட்ட பொது மேலாளர் ஆதிஷ் மண்டல், எல் அண்ட் டி நிர்வாகம் சார்பில் திட்ட இயக்குநர் சுரேஷ், துணை பொது மேலாளர் (நிர்வாகம்) மோகன், மேலாளர் (பாதுகாப்பு) இந்திரஜித் சக்கரவர்த்தி மற்றும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன மனித வளத்துறை பொது மேலாளர் சோனிகா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

Related Tags :
Next Story