விருகம்பாக்கத்தில் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் திருடிய வழக்கில் ஒருவர் கைது


விருகம்பாக்கத்தில் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் திருடிய வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 March 2018 3:15 AM IST (Updated: 1 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விருகம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான தொலைபேசி நிறுவனம் உள்ளது.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், காளி அம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான தொலைபேசி நிறுவனம் உள்ளது. கடந்த 6-ந் தேதி இந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 8 மடிக்கணினிகள், 6 செல்போன்களை திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நொண்டி முருகன் (வயது 48) என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர்.

அதில் அவர், தொலைபேசி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நொண்டி முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மடிக்கணினிகள், 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். 

Next Story